இறையாண்மையை மீறுகிறது சீனா -கொதிக்கும் இராஜாங்க அமைச்சர்
நிராகரிக்கப்பட்ட உரத்தை பலவந்தமாக கையளிக்க முயற்சிப்பதற்கு சீன நிறுவனத்திற்கு உரிமையில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகமும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர(Dayasiri Jayasekara) தெரிவித்துள்ளார்.
இது இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை தொடர்பான பாரதூரமான பிரச்சினை எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
உரம் அடங்கிய கப்பலை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என விசாரணை முடிவுகள் தெளிவாக நிரூபித்திருந்தாலும், அதனை எவ்வாறு இலங்கைக்கு மீண்டும் அனுப்புவது என்பது கேள்விக்குறியாக உள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடன் கடிதங்கள் திறக்கப்படுவதற்கு முன்னர் உர மாதிரிகள் கொண்டு வரப்பட்டு பரிசோதிக்கப்பட்டு பணம் வைப்பு செய்யப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் வெற்றிடங்களுக்கான புதிய அமைப்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான நேர்காணலுக்காக இன்று (27) காலை கட்சியின் தலைமையகத்திற்கு விஜயம் செய்த போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.