இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கும் சீனா
இலங்கைக்கு தொடர்ந்தும் பல உதவிகளை வழங்கி வரும் சீனா, தற்போது இராணுவ உதவிகளை வழங்க முன்வந்துள்ளது.
இதன்படி, சிறிலங்கா இராணுவத்துக்கு சீனா இன்றைய தினம் வெடிபொருள் அகற்றும் சிறப்பு கருவிகளை வழங்கியுள்ளது.
இலங்கையில் இராணுவதளத்தை அமைக்க சீனா நடவடிக்கை எடுத்து வருவதாக அமெரிக்க புலனாய்வு பிரிவு தகவல் தெரிவித்திருந்தது.
ரோபோ இயந்திரங்கள்
இந்த நிலையில், இலங்கைக்கு இராணுவ உதவிகளை வழங்குவது தொடர்பான ஒப்பந்தமொன்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் ஆகியோருக்கிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதற்கமைய, 28 வெடிபொருள் அகற்றும் ரோபோ இயந்திரங்கள், 10 வெடிக்கும் பொருட்களில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கான உபகரணங்கள் மற்றும் 10 வெடிப்புகளிலிருந்து தற்பாதுகாப்பதற்கான தாங்கிகள் மற்றும் வாகனங்கள் சீன இராணுவத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன.
சீன இராணுவத்தின் உதவி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு இந்த இராணுவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கிய போது பல கடனுதவிகளை வழங்கிய சீனா, தற்போது இராணுவ உதவிகளை வழங்க முன்வந்துள்ளமை அமெரிக்க புலனாய்வு பிரிவு வெளியிட்ட தகவலை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |