டெஸ்லாவை முந்தியது சீனாவின் BYD
உலகின் முன்னணி இலத்திரனியல் வாகன தயாரிப்பு நிறுவனமான எலன் மஸ்கின் டெஸ்லாவை சீனாவின் BYD கார் தயாரிப்பு நிறுவனம் பின்தள்ளியுள்ளது.
வருடாந்த விற்பனையில் தனது அமெரிக்கப் போட்டியாளரை BYD நிறுவனம் முறியடித்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
ஷென்செனை தளமாகக் கொண்ட நிறுவனமான BYD, XPeng மற்றும் Nio போன்ற EV தயாரிப்பாளர்களின் எழுச்சியிலிருந்து அதன் முக்கிய சந்தையான சீனாவில் அதிகரித்து வரும் போட்டியை எதிர்கொள்கிறது.
மிகப்பெரிய சந்தை
2025 ஒக்டோபரில் BYD சீனாவிற்கு வெளியே அதன் மிகப்பெரிய சந்தையாக மாறியுள்ளது.

புதிய அறிமுகங்களுக்குக் கிடைத்த கலவையான வரவேற்பு, மஸ்க்கின் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பான அதிருப்தி மற்றும் சீனப் போட்டியாளர்களிடமிருந்து அதிகரித்து வரும் போட்டி ஆகியவற்றால் டெஸ்லா நிறுவனம் இவ்வாறு பின்தங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
2025 ஆம் ஆண்டில் டெஸ்லா கார் விற்பனை கிட்டத்தட்ட 9% குறைந்து, உலகளவில் 1.64 மில்லியன் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக கார் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியாகும். இந்தப் புள்ளிவிபரங்களுக்கு அமைய BYD நிறுவனம், டெஸ்லாவை பின்தள்ளியுள்ளது.
கடந்த ஆண்டில் தனது மின்கலத்தால் இயங்கும் கார் விற்பனை கிட்டத்தட்ட 28% அதிகரித்து 2.25 மில்லியனுக்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளதாக BYD நிறுவனம் தெரிவித்திருந்தது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |