இந்தியாவுக்கு வைக்கும் செக்..!
இலங்கையின் தென்பகுதியில் தெய்வேந்திர முனையில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் சீனா புதியதொரு ராடர் தளத்தை நிறுவ முனைவதான செய்திகள் சிறிலங்காவின் உளவுத்துறையின் ஆதாரங்களின் அடிப்படையில் வந்துள்ளன.
இவை இலங்கைக்கு மட்டுமல்லாது இந்தியாவுக்கும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்த போகின்றமை வெளிப்படையான விடயமே..
இவ்வாறிருக்க, சீனாவை இந்தியா கட்டுப்படுத்த வேண்டும் என்றால் இந்தியா அமெரிக்காவுடன் அணி சேர வேண்டும் என அரசியல் ஆய்வாளர் திரு ஜெயபாலன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் மெய்ப்பொருள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு சுட்டிக்காட்டினார்.
மேலும், இலங்கை தொடர்பில் இந்தியா மற்றும் சீனாவின் நிலைப்பாடுகள் பற்றியும், அடுத்த கட்ட நகர்வுகள் எப்படியிருக்கும் என்பது பற்றியும் ஐபிசி தமிழின் மெய்ப்பொருள் ஆராய்ந்திருக்கிறது.
இந்தியாவுக்கு வைக்கும் செக் (காணொளி)
