ஜின்பிங் அதிகாரப்பிடி! சர்வதேச சந்தைகளில் சடுதியாகச் சரிந்த பங்குகள்
சீனாவில் கடுமையான கொரோனா தொற்றுப் பரவல் கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர அதிகாரிகள் முயற்சித்துவரும் நிலையில், ஏனைய நகரங்களுக்கும் ஆர்ப்பாட்டங்கள் பரவியுள்ளமை அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் சீனா முழுவதும் பரவும் பட்சத்தில், சீன அரசாங்கம் கட்டுப்பாட்டை இழக்கும் அபாயம் உள்ளதாக கல்வியியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்
சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங் பதவியேற்ற பின்னர் முன் எப்போதும் இல்லாத வகையில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
இந்த நிலையில், இந்த ஆர்ப்பாட்டங்களை அடக்க அதிபர் ஜி ஜின்பிங் தவறும் பட்சத்தில், அது பலவீனத்தின் அறிகுறியாக இருக்கும் என்பதுடன், மேலும் போராட்டங்களுக்கு வழிவகுக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அரசாங்கம் இதனை விரைவாக கட்டுப்படுத்த தவறினால், முடக்க கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்ட நகரங்களில் போராட்டங்கள் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பூஜ்ஜிய கொவிட் கொள்கை
இந்த ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த தவறும் பட்சத்தில் கமியூனிஸ்ட் கட்சியும் கட்டுப்பாட்டை இழக்கும் என்பதால், அதற்கு அதிபர் ஜி ஜின்பிங் அனுமதிக்க மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் பூஜ்ஜிய கொவிட் கொள்கையில் சில மாற்றங்களை சீன அதிபர் செய்யலாம் என்ற போதிலும், அந்த மாற்றங்கள் போராட்டங்கள் முடிவுக்கு வந்த பின்னரே மேற்கொள்ளப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பங்குகளின் விலை கடும் வீழ்ச்சி
சீனாவில் கொரோனா பரவல் மற்றும் அதைச் சார்ந்து வெடித்துள்ள போராட்டங்களால் சர்வதேச சந்தைகளில் பங்குகளின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
ஐரோப்பிய, ஆசிய பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியால் முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
சீனாவில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிப்பது உற்பத்தி, போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் இடர்பாடுகளை ஏற்படுத்தும் என்பதால், விநியோகச் சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டு பணவீக்கத்திற்கு வழிவகுக்கும் என்று முதலீட்டாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் மாலை திருவிழா


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 2 நாட்கள் முன்
