கொழும்பில் சீன நாட்டவர்களிடையே பதற்றம்! தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
இலங்கையில் உள்ள சீனக் குடிமக்கள் சம்பந்தப்பட்ட தற்போதைய விவகாரத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
உண்மைகளைக் கண்டறிய கூடிய விரைவில் விரிவான விசாரணையை நடத்துமாறு இலங்கை அதிகாரிகளுக்கு தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பு துறைமுக நகரில் இரு சீனக் குழுக்களிடை ஏற்பட்ட மோதல் மற்றும் அங்கிருந்து சீன நாட்டவர் ஒருவர் கடத்தப்பட்டுள்ள சம்பங்களை தொடர்ந்து தூதரகத்தின் மேற்படி அறிக்கை வெளியாகியுள்ளது.
சீனக் குடிமக்களின் தனிப்பட்ட பாதுகாப்பு
அறிக்கையில், இது குறித்து முழுமையான விசாரணை நடத்தி, இலங்கையில் உள்ள சீனக் குடிமக்களின் தனிப்பட்ட பாதுகாப்பு, சட்டப்பூர்வ உரிமைகள் மற்றும் நியாயமான நலன்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு இலங்கை காவல்துறையிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இலங்கையில் உள்ள சீனக் குடிமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், தங்களது தனிப்பட்ட பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை வலுப்படுத்திக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, ஏதேனும் அவசரநிலை அல்லது பாதுகாப்பு தொடர்பான சம்பவங்கள் நிகழ்ந்தால், உடனடியாக இலங்கை காவல்துறையிடம் தெரிவிக்குமாறும், தேவைப்படும் பட்சத்தில் உதவிக்கு சீனத் தூதரகத்தைத் தொடர்பு கொள்ளுமாறும் சீனக் குடிமக்களுக்கு தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 11 மணி நேரம் முன்