அமெரிக்காவுக்கு அடுத்து உலகிலேயே அதிக செலவு செய்யும் சீனா!
சீனா பாதுகாப்புத் துறைக்கான தனது பாதீடு (budget) ஒதுக்கீட்டை 7.2 சதவீதம் அதிகரிப்பதாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவுடனும், தைவான், ஜப்பான் போன்ற அண்டை நாடுகளுடனும் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், தனது ராணுவத்தை மேலும் நவீனமாக்குவதற்காக பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டை சீனா அதிகரித்து வருகிறது.
நவீன ஆயுத கொள்வனவு
சீன ராணுவத்துக்கு புதிய ஆயுதங்களை வடிவமைப்பதற்கான ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சிப் பணிகள், நவீன ஆயுதங்களை பிற நாடுகளிடமிருந்து வாங்குவது ஆகியவற்றுக்காக சீனா செலவிடும் தொகையையும் கணக்கில் கொண்டால், பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டதைவிட பல மடங்கு தொகையை சீனா இராணுவத்துக்காக செலவிடுவதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே மிக அதிக அளவு தொகையை (1.6 லட்சம் கோடி யூவான்) இராணுவத்துக்காக ஒதுக்கீடு செய்து வரும் சீனா, கடந்த ஆண்டும் இதே அளவுக்கு தனது பாதுகாப்பு பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டை அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |