திருப்பி அனுப்பப்பட்ட சீன கப்பல் மீண்டும் இலங்கை கடலுக்குள் நுழைந்துள்ளது! வெளிவந்த பரபரப்பு செய்தி
Hippo Spirit கப்பல் Seiyo Explorer என்ற பெயருடன் மீண்டும் இலங்கைக் கடலுக்குள் நுழைந்ததாக Marine Traffic இணையதளங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
குறித்த கப்பல் தற்போது ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Hippo Spirit கப்பலானது, நிராகரிக்கப்பட்ட சீன உரங்களை டன் கணக்கில் எடுத்து சீனாவுக்கு சென்ற கப்பலாகும்.
செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி 20,000 மெட்றிக் தொன் கரிம உரங்களை ஏற்றிக்கொண்டு Hippo Spirit கப்பல் சீனாவின் கிங்டாவ் துறைமுகத்திலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்டது.
இந்த நிலையில், அதன் உர மாதிரிகளில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் கண்டறியப்பட்டதால் கப்பல் சீனாவுக்கு திருப்பி விடப்பட்டது.
எனினும் குறித்த கப்பல் சீனாவுக்க செல்லவில்லை. அதற்குப் பதிலாக, சிங்கப்பூருக்கு பயணம் செய்துள்ளது.
சீனாவுக்கு செல்லாத Hippo Spirit, 14ஆம் திகதி கப்பலைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்பட்ட தானியங்கி அடையாள அமைப்பு (AIS) மலாக்கா ஜலசந்தியில் செயலிழக்கச் செய்யப்பட்டது.
பின்னர் Seiyo Explorer என்ற பெயரில் Hippo Spirit கப்பல் இம்மாதம் 24ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் உள்ளதாக இணையத்தில் கிடைக்கும் தரவுகளை மேற்கோளிட்டு இலங்கை ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Hippo Spirit மற்றும் Seiyo Explorer இரண்டும் ஒரே IMO எண்ணைப் பகிர்ந்து கொள்கின்றன, எனவே Hippo Spirit தான் Seioy Explorer என்பதை உறுதிப்படுத்துகின்றன.
IMO கப்பல் அடையாள எண் என்பது ஒரு தனித்துவமான ஏழு இலக்க எண்ணாகும், இது ஒரு கப்பலின் வாழ்நாள் முழுவதும் மாறாமல் இருக்கும் எண் ஆகும்.
பெயர்கள், கொடிகள் அல்லது உரிமையாளர்களின் எந்த மாற்றத்தையும் அது பொருட்படுத்தாது.
இந்த நிலையில், இம்மாதம் 24 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு அப்பால் இலங்கையின் கடற்பரப்பில் கப்பல் காணப்பட்ட போதிலும், கண்காணிப்பு அமைப்புகளில் கப்பல் வரம்பிற்கு அப்பால் சென்றுள்ளது.
ஆனால் ஞாயிற்றுக்கிழமை (31), கப்பல் இலங்கைக் கடலுக்குள் நுழைந்து தற்போது ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் உள்ளதாக கடல் போக்குவரத்து இணையத்தளங்கள் உறுதிப்படுத்தின.