இலங்கையில் இருந்து மாலைதீவுக்கு நாடுகடத்தப்பட்ட சீனப்பிரஜை: வெளியான காரணம்
சீனாவில் (China) பாரிய நிதி மோசடி தொடர்பில் சர்வதேச காவல்துறையினரால் ‘நீல அறிவிப்பு’ வெளியிடப்பட்ட சீன பிரஜை ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நாடு கடத்தப்பட்டுள்ளார்.
28 வயதான சீனப் பிரஜை, பெரிய அளவிலான நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சீனாவில் தேடப்படும் நபர் என்று கூறப்படுகிறது.
செப்டம்பர் 03 ஆம் திகதி மாலைதீவில் இருந்து கட்டுநாயக்கவிற்கு வந்திருந்த அவர் குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
மேலதிக விசாரணை
இந்த நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தின் குற்றப்புலனாய்வு திணைக்கள் அதிகாரிகளின் மேலதிக விசாரணையைத் தொடர்ந்து, அவர் நேற்று (04) இரவு எமிரேட்ஸ் விமானத்தில் மாலைதீவுக்கு (Maldives) நாடு கடத்தப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |