இன்றும் கட்டுநாயக்காவில் கைது செய்யப்பட்ட சீன பிரஜைகள்
Bandaranaike International Airport
Sri Lanka Customs
Arrest
By Jaso
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட, ரூ. 8.3 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள சீனத் தயாரிப்பு சிகரெட் பொதிகளுடன் மூன்று சீன நாட்டினர் இன்று காலை (4) கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 35, 38 மற்றும் 50 வயதுடைய சீன நாட்டினர் ஆவர். அவர்கள் 6 சூட்கேஸ்களில் மறைத்து, 55,800 சிகரெட்டுகள் அடங்கிய 279 அட்டைப் பெட்டிகளை நாட்டிற்குள் கொண்டு வந்திருந்தனர்.
பசுமை சாலை வழியாக செல்ல முற்பட்டபோது கைது
விமான நிலையத்தின் 'பசுமைச் சாலை' வழியாக சிகரெட் பொதியை வெளியே கொண்டு செல்ல முயன்றபோது, விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அண்மைக்காலமாக கட்டுநாயக்காவில் அதிகளவான சீன பிரஜைகள் கைது செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்