மையப் புள்ளியாகும் இலங்கை: இரகசிய கண்காணிப்பில் ஈடுபட்ட சீன கப்பல்! இந்தியாவை சீண்டுகிறதா சீனா
சீனாவின் “ஷி யான் 6” என்ற ஆய்வு கப்பல் இந்தியாவின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்கு அருகில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச கடல் போக்குவரத்து கண்காணிப்பு தளங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த கப்பல் மலாக்கா ஜலசந்தி வழியாக இந்தியப் பெருங்கடலில் நுழைந்து நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் மிக மெதுவாக நகர்ந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
ஐ.நா முன்றலில் புலம்பெயர்ந்தோரால் முன்னெடுக்கப்பட்ட பாரிய போராட்டம்: பின்கதவால் தப்பி ஓடிய ரணில் (படங்கள்)
வங்காள விரிகுடாவை நோக்கிய பயணம்
நேற்றையதினம் வரை இலங்கை நோக்கி பயணத்தை மேற்கொண்ட குறித்த கப்பல் தற்போது வங்காள விரிகுடாவை நோக்கித் திரும்பி, இந்தியாவின் பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்திற்கு அருகில் அமைந்துள்ள நிக்கோபார் தீவுகளை நோக்கி செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கப்பலின் வழியைக் கண்காணித்தபோது, ஷி யான் 6 இந்தியப் பெருங்கடலின் தரையில் அமைந்துள்ள ஒரு பரிமாண அமைப்பான 90 கிழக்கு முகடு வழியாக நகர்வதாக சர்வதேச கடல் போக்குவரத்து கண்காணிப்பு தளங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த இரண்டு தசாப்தங்களில், தொண்ணூறு ஈஸ்ட் ரிட்ஜ் என்று அழைக்கப்படும் இந்தப் பகுதியில் இந்தியாவும் அமெரிக்காவும் பல ஆய்வுத் திட்டங்களில் ஈடுபட்டிருந்த நிலையில், தற்போது சீன கப்பல் அங்கு வந்துள்ளமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.