கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது சீன போர்க்கப்பல்
புதிய இணைப்பு
சீன மக்கள் விடுதலை இராணுவக் கடற்படையின் பாய்மரப் பயிற்சிப் போர்க்கப்பலான ‘PO LANG’ இன்று (8) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
'PO LANG' என்பது 35 அதிகாரி கேடட்கள் உட்பட 130 பணியாளர்களால் 86 மீட்டர் நீளமுள்ள பாய்மரப் பயிற்சிக் கப்பலாகும்.
கப்பலின் கட்டளை அதிகாரி, கமாண்டர் மா வென்யோங் இன்று மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில், மேற்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்கவை சந்திக்க உள்ளார். இந்த போர்க்கப்பல் ஒக்டோபர் 11 ஆம் திகதி இலங்கையில் இருந்து புறப்பட உள்ளது.
முதல் இணைப்பு
சீன(china) இராணுவப் பயிற்சிக் கப்பல் ஒன்று இலங்கைக்கு(sri lanka) வருவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத்(vijitha herath) தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
சில தினங்களில் சீன இராணுவப் பயிற்சிக் கப்பல்
இம்மாதம் இன்னும் சில தினங்களில் சீன இராணுவப் பயிற்சிக் கப்பல் ஒன்று இலங்கைக்கு வரவுள்ளது. அதற்கான அனுமதியை வழங்கியுள்ளோம்.
இதனால் இலங்கையின் பாதுகாப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
அமெரிக்க, இந்திய மற்றும் ஜெர்மன் போர்க்கப்பல்கள்
முன்னதாக, அமெரிக்க(us), இந்திய(india) மற்றும் ஜெர்மன் (germany)போர்க்கப்பல்கள் வந்துள்ளன. இதுபோன்ற இராஜதந்திர உறவுகளில், அனைத்து நாடுகளுடனும் சமச்சீராக நடந்து கொள்கிறோம் எனத் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |