கிறிஸ்துமஸ் கொண்டாடுவதனை தடை செய்துள்ள உலக நாடுகள்
கிறிஸ்துமஸ் உலக அளவில் அதிகளவு மக்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். புனித கிறிஸ்துவின் பிறந்த நாளை கொண்டாடும் இந்த நாளில் உலகம் முழுவதும் மகிழ்ச்சியும், உற்சாகமும் நிறைந்திருக்கும்.
ஆனால் இந்த வழக்கம் அனைத்து நாடுகளிலும் கடைபிடிக்கப்படுவதில்லை. உலகில் சில நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் முற்றிலும் தடைசெய்யப்பட்டதாக இருக்கிறது.
இந்த நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாடுவது தடைசெய்யப்பட்டதாகவும், அதனை மீறினால் சிறைத்தண்டனை விதிக்கும் வழக்கமும் இருந்து வருகிறது.
இந்த பதிவில் எந்தெந்த நாடுகளில் கிறிஸ்துமஸ் தடைசெய்யப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.
புருனே
புருனேயில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை பொது இடங்களில் நடத்த தடை விதித்ததுடன், அவ்வாறு பிடிபட்டவர்களுக்கு அபராதமும் சிறைத்தண்டனையும் விதித்தது.
குறிப்பாக சாண்டா கிளாஸ் தொப்பிகள், மெழுகுவர்த்திகள், மதப் பாடல்கள் மற்றும்வீட்டை அலங்கரிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
தஜிகிஸ்தான்
தஜிகிஸ்தானின் கல்வி அமைச்சகம் கிறிஸ்துமஸ் மரம், பரிசுப் பரிமாற்றம், பட்டாசுகள் மற்றும் பண்டிகை உணவுகளை தடை செய்துள்ளது.
2014 இல், அரசாங்கம் கிறிஸ்துமஸ் தாத்தாவையும் தடை செய்தது. இதுமட்டுமின்றி தஜிகிஸ்தான் ஹாலோவீனையும் தடை செய்துள்ளது.
சவுதி அரேபியா
சவுதி அரேபியா அதன் தீவிர சட்டங்கள் மற்றும் மத நம்பிக்கைகளுக்கு நன்கு அறியப்பட்டதாகும். இங்கு மிக குறைவான அளவிலான மக்கள் மட்டுமே கிறிஸ்துவத்தை பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள்.
வெளிநாட்டவர்கள் பண்டிகையை ரகசியமாக கொண்டாடுவதற்கு அனுமதிக்கப்படுகிறது, ஆனால் பொதுவெளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் அல்லது எந்த மத நிகழ்ச்சிகளும், சவுதி அரேபியாவில் அனுமதிக்கப்படுவதில்லை.
வட கொரியா
வட கொரியா அதிகாரப்பூர்வமாக கிறிஸ்துமஸை தடை செய்யவில்லை என்றாலும், கிறிஸ்துமஸுக்கு விரோதமான மனப்பான்மை கொண்ட நாடுகளில் அது முக்கியமான இடத்தில் உள்ளது.
வட கொரியாவில் மற்ற நாட்களைப் போலவே கிறிஸ்துமஸும் சாதாரண நாள்தான். நாத்திக நாடாக இருப்பதால், வட கொரியா மக்களுக்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு அனுமதிப்பதில்லை.
அல்பேனியா
அல்பேனியா நாடு 1967 இல் கிறிஸ்துமஸை மட்டுமல்ல, ஒட்டுமொத்த கிறிஸ்தவத்தையும் தடை செய்தது, இது உலகின் முதல் நாத்திக நாடாக மாறியது.
இருப்பினும், 1970 இல் கம்யூனிஸ்ட் கட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு இந்த தடை நீக்கப்பட்டது.
கியூபா
பிடல் காஸ்ட்ரோ கியூப அரசாங்கத்தை நாத்திக அரசாக என்று அறிவித்தார், அவரது கட்சி 1959 இல் ஆட்சியைப் பிடித்தது.
1969 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் தலைவர் கிறிஸ்துமஸைத் தடை செய்தார், ஏனெனில் மக்கள் 'பார்ட்டி' செய்வதை நிறுத்தி சர்க்கரை அறுவடையில் வேலை செய்யத் தொடங்கினார்.
பின்னர், போப் ஜான் பால் II தான், 1998 இல் தனது விஜயத்தின் போது, தடையை நீக்குமாறு காஸ்ட்ரோவை வற்புறுத்தினார். காஸ்ட்ரோ இறுதியில் ஒப்புக்கொண்டு கிறிஸ்துமஸ் தினத்தை தேசிய விடுமுறையாக அறிவித்தார்.
சோமாலியா
சோமாலியா நாடு 2013 இல் கிறிஸ்துமஸைத் தடை செய்தது. சோமாலியா ஒரு முஸ்லீம் நாடாக இருப்பதால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தேவையில்லை என்று அவர்கள் கருதினர்.
2015 ஆம் ஆண்டில், அவர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தைத் தடை செய்யச் சென்றனர், மேலும் காவல்துறையினரை பாதுகாப்பில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
சீனா
1949 முதல் சீனாவில் கிறிஸ்துமஸ் மற்றும் கிறிஸ்தவம் முழுவதும் தடைசெய்யப்பட்டது. சீனாவில் கிறிஸ்துமஸ் ஒரு தேசிய விடுமுறை அல்ல, ஆனால் மக்கள் வெளியே சென்று தங்கள் சொந்த முறையில் கொண்டாடுகிறார்கள்.
ஆனால் கடுமையான விதிமுறைகள் காரணமாக பொது இடங்களில் கிறிஸ்துமஸ் பாடல்களை பாடுவது அனுமதிக்கப்படவில்லை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |