இலங்கையில் விமர்சையாக கொண்டாடப்பட்ட கிறிஸ்மஸ் கொண்டாடங்கள்(படங்கள்)
உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களால் இயேசு கிறிஸ்து பிறந்த தினமான இன்று கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.
இலங்கையிலும் பல இடங்களில் கிறிஸ்மஸ் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் மலையகத்தில் கிறிஸ்தவர்கள் நத்தார் பண்டிகையை மிக விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
மலையகம்
மலையகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவலாயங்களில் விசேட ஆராதனைகள் இயேசு பிறப்பையொட்டி கலை விழாகள் என இடம்பெற்று வருகின்றன.
ஹட்டன் நகரத்தில் உள்ள திருச்சிலுவை தேவலாயத்தில் நள்ளிரவு 12 மணிக்கு விசேட ஆராதனைகள் இடம்பெற்று அருட் தந்தை நியூமன் பீரிஸினால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இதில் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது வழிபாடுகளில் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புத்தளம்
இந்நிலையில் புத்தளம் அன்னை சாந்த மரியா ஆலயத்தில் இன்று நள்ளிரவு 12 மணியளவில் கிறிஸ்துமஸ் ஆராதனைகள் இடம்பெற்றன.
நீராடி புத்தாடைகளை அணிந்து மக்கள் ஆலயத்திற்கு வருகைத் தந்து திருப்பலியில் ஈடுபட்டனர்.
ஆலய அருட்தந்தை நிலங்க நிர்மானின் தலைமையில் திருப்பலி கூட்டாக ஒப்புகொடுக்கப்பட்டது.
இதன்போது அருட்சகோதரிகள் ஆயர்கள், குருக்கள் மற்றும் பக்த அடியார்கள் திருப்பலியில் கலந்து கொண்டனர்.
இதன்போது ஆலயங்களுக்கு உள்ளே மற்றும் வெளியே காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமையைக் காணக்கூடியதாக இருந்தது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |