இலங்கையில் 'நத்தார்' கொத்தணி உருவெடுக்கும் சாத்தியம்!!!
இந்த வருட (2021) நடுப்பகுதியில் இலங்கையில் புதுவருட கொவிட் கொத்தணி உருவாகும் என எச்சரித்திருந்த தொற்றுநோயியல் நிபுணர் ஹசித அத்தநாயக்க (Hasitha Athanayake), இன்று “நத்தார் கொத்தணி உருவாகாமல் இருப்பது மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளதாக” குறிப்பிட்டுள்ளார்.
இன்று (22) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாவிடின் நத்தார் கொத்தணி உருவாவதை தடுக்க முடியாது என எச்சரித்துள்ளார்.
ஊடக சந்திப்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
''நத்தாரை கொண்டாடுவதில் மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர். எனினும் கடந்த புத்தாண்டுக் கொத்தணி போன்ற அசம்பாவித சம்பவங்கள் இடம்பெறாமல் இருக்க சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். முன்பு போலவே சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.
ஏப்ரலில் புத்தாண்டுக் கொத்தணி வரலாம் என எச்சரித்தேன். நான் சொன்னது போலவே நடந்தது. எனவே இந்த நத்தாரிலும் எங்கு செல்கிறோம் என்பதில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.