தமிழர் தாயகத்தில் களைகட்டிய நத்தார் பண்டிகை...!
நத்தார் பண்டிகையை முன்னிட்டு தமிழர் பிரதேசங்களில் வழிபாட்டு நிகழ்வுகள் விமர்சையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதனடிப்படையில், இரவு 12 மணியிலிருந்து வழிபாட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு, தமிழர் பிரதேசங்களில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் வவுனியாவிலும் வழிபாட்டு நிகழ்வுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில்,
🛑 யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் மரியன்னை பேராலயத்தில் நத்தார் தினத்தை முன்னிட்டு விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.
இதன்போது ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள இயேசு பாலன் பிறப்பை வெளிப்படுத்தும் பாலன் குடில் ஆயர்களால் ஒளியேற்றப்பட்டது.


மேலதிக செய்திகள் -Thampithurai Pratheepan
🛑வவுனியா
வவுனியா காவல்துறை தலைமையகத்தினால் நத்தார் குடில் திறந்து வைக்கப்பட்டது.
நத்தார் பண்டிகையை ஒட்டி வவுனியா காவல் தலைமையகத்தில் வவுனியா அந்தோனியார் ஆலயத்தின் பங்குத்தந்தை கிறிஸ்தோபர் அந்தோனிதாஸ் டலிமாவினால் நத்தார் பாலகன் குடிலில் வைக்கப்பட்டு நத்தார் ஆராதனைகள் இடம்பெற்று நத்தார் கொண்டாட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.
வவுனியா சமுதாய காவல்துறையினரின் ஏற்பாட்டில் கிராமிய சமுதாய காவல்துறை அங்கத்தவர்களின் பங்குபற்றுதலோடு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் உதவி காவல்துறை அத்தியாட்சகர் என்.எம்.திசாநாயக, வவுனியா காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரஜீத் சுரங்க வீரத்தன உட்பட சமுதாய காவல்துறை பொறுப்பதிகாரி மற்றும் சிவில் பாதுகாப்பு குழு முக்கியஸ்தர்களின் பங்கு பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


மேலதிக செய்திகள் - Kabil
🛑 கிளிநொச்சி
நத்தார் விசேட வழிபாடுகள் கிளிநொச்சியில் பல்வேறு திருச்சபைகளில் சிறப்பாக நடைபெற்றது.
முறிகண்டி தென்னிந்திய திருச்சபையில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு அருட்பணி ஜோசுவா தலைமையில் நடைபெற்றது.


மேலதிக செய்திகள் - Khandeepan Thangarajah
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |