அமைச்சர் வசந்தவுக்கு எதிராக அவதூறு! எடுக்கப்பட்ட உடன் நடவடிக்கை
இலங்கையில் வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்(CID) முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளது.
அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் அவரது மக்கள் தொடர்பு அதிகாரி நிமோதி விக்ரமசிங்க ஆகியோரை குறிவைத்து சமூக ஊடகங்களில் பொய்யான மற்றும் அவதூறான பதிவுகள் பரப்பப்படுவது தொடர்பாக இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை
அமைச்சர் மற்றும் அவரது ஊழியர்கள், குடும்பம் மற்றும் தொழில்முறை நற்பெயர் மற்றும் அவரது அரசியல் தன்மைக்கு சேதம் விளைவிக்கும் வகையில் பல முகப்புத்தக பக்கங்கள் மற்றும் வலைத்தளங்கள் ஜோடிக்கப்பட்ட கதைகள், திருத்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் தவறான உள்ளடக்கங்களை வெளியிட்டுள்ளதாக அமைச்சு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தொடர்புடைய நபர்கள் மற்றும் சமூக ஊடக பக்கங்களை விசாரித்து, 20039516 என்ற எண்ணின் கீழ் இந்த முறைப்பாட்டை பதிவு செய்வதன் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு CIDயிடம் கோரப்பட்டுள்ளது.
அதன்போது, நிமந்த பெரேரா, துமிந்து ஜெயசூரியா, கே.டபிள்யூ. பத்மசிறி, மஞ்சுள பெரேரா, ரன்னு ஜாஸ், துஷாரி பத்திராஜா, பாலித தேவசிறி, ரசிகா விக்கும்பிரியா, பெர்னாண்டோ இனோகா மற்றும் கம்பஹா பொது ஜன கதா என்ற முகப்புத்த கணக்குகளுக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
