சிறைக் கைதியை கொலை செய்ய நாமல் திட்டமாம்.! சிஐடிக்கு விரைந்த மொட்டுக் கட்சி
சமூக ஊடகங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனிப்பட்ட கொலையைத் திட்டமிட்டதாகப் பரப்பப்படும் தவறான செய்தி தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவொன்று முன்வைத்துள்ளது.
இது தொடர்பில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அக்கட்சியின் உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குறித்து தவறான தகவல்கள் யூரியூப்பில் பரப்பப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
கொலை திட்டம்
“நாமல் ராஜபக்ச, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஒருவரைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், சிறிலங்கா பொதுஜன பெரமுன மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பாதாள உலகத் தொடர்புகளைப் பயன்படுத்துவதாகவும் யூரியூப் சனல் தெரிவிக்கிறது.
இந்தப் பொய்யான கூற்றுக்களை நாங்கள் கடுமையாக மறுக்கிறோம்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மொட்டுக் கட்சிக்கு அவதூறு
மேலும், அந்த யூரியூப் சனல் வெளிநாட்டிலிருந்து இயக்கப்படுகிறது என்றும், இது சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் அதன் உறுப்பினர்களை அவதூறு செய்யும் முயற்சி எனவும் அக்கட்சி உறுப்பினர் கூறியுள்ளார்.
இதன்படி, குறித்த விவகாரம் தொடர்பில் விரிவான விசாரணை நடத்தக் கோரியே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
