பாதாள நிழல் உலகை நிலைகுலைய வைத்த சிஐடியின் அதிரடி நடவடிக்கை
இந்தோனேசியாவில் (Indonesia) வைத்து ஐந்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் ஒரே நேரத்தில் கைது செய்யப்பட்து இலங்கை வரலாற்றில் முதல் முறையாகும்.
இலங்கை (Sri Lanka) காவல்துறையினரின் ஒருங்கிணைப்பு மற்றும் இன்டர்போலின் உதவியுடன் இந்தோனேசிய காவல்துறையிருடன் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அசங்க கரவிட்டவின் அறிவுறுத்தலின் பேரில், மேற்கு வடக்கு குற்றப் பிரிவின் பொறுப்பான உதவி காவல்துறை அத்தியட்சகர் ரோஹன் ஒலுகல மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவி காவல்துறை அத்தியட்சகர் மஹிந்த ஜயசுந்தர ஆகிய இரு அதிகாரிகளும் சுமார் 7 நாட்களுக்கு முன்பு இந்தோனேசியாவிற்கு அனுப்பப்பட்டனர்.
இருவரும் தூதரக மட்டத்தில் இந்தோனேசிய காவல்துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்பு காவல்துறை குழுவுடன் குற்றவாளிகள் மீது கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வந்திருந்தனர்.
விசாரணைகளை நடத்திய இரண்டு இந்நாட்டு காவல்துறை அதிகாரிகளும் இந்த 7 நாட்களில் ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டுள்ளதாகவும், குற்றவாளிகளைத் தேடும் போது நடைபாதைகளில் கூட தூங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இது தொடர்பான மேலும் பல தகவல்களை விரிவாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் “இன்றைய அதிர்வு”
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

