சுரேஷ் சலேயின் மின்னஞ்சல், வங்கி கணக்குகளை ஆய்வு செய்ய சிஐடி தீர்மானம்

CID - Sri Lanka Police Sri Lanka Easter Attack Sri Lanka Suresh Salley
By Independent Writer Feb 26, 2026 10:45 AM GMT

கைது செய்யப்பட்ட அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே பயன்படுத்திய கணினிகள், கையடக்கத் தொலைபேசிகள், மின்னஞ்சல் தகவல்கள் மற்றும் அவரது வங்கி கணக்குகளை விரிவாக ஆய்வு செய்ய புலனாய்வாளர்கள் தீர்மானித்துள்ளனர்

2019 ஏப்ரல் 21இல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குச் சதி செய்தமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சுரேஷ் சலே நேற்று (25) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேலியகொட பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்கு நேற்று காலை 8.10 மணியளவில் சுரேஷ் சலே பணிக்குச் சென்று கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட அவரைத் தொடர்ந்து சி.ஐ.டி தலைமையகத்திற்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் 72 மணிநேர தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சுரேஷ் சலே கைது : முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரிக்காக நீதிமன்றில் முன்னிலையான அலி சப்ரி

சுரேஷ் சலே கைது : முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரிக்காக நீதிமன்றில் முன்னிலையான அலி சப்ரி

 சி.ஐ.டியினர் சமர்ப்பித்த இரகசிய அறிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான முக்கிய தகவல்கள் அவருக்கு முன்கூட்டியே தெரிந்திருந்ததா, தெரிந்திருந்தும் அவர் அதனை உரிய தரப்பினருக்கு அறிவிக்காமல் மறைத்தாரா, என்பது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சுரேஷ் சலேயின் மின்னஞ்சல், வங்கி கணக்குகளை ஆய்வு செய்ய சிஐடி தீர்மானம் | Cid To Examine Suresh Sallay S Email Bank Accounts

ஏற்கனவே இத்தாக்குதல் தொடர்பாக நௌபர் மௌலவி உள்ளிட்ட 25 பேருக்கு எதிராகக் கொழும்பு மேல்நீதிமன்றில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், கோட்டை நீதவான் நீதிமன்றில் சி.ஐ.டியினர் சமர்ப்பித்த இரகசிய அறிக்கைகளை அடுத்து இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

சுரேஷ் சலேயின் கைதைத் தொடர்ந்து, இத்தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மேலும் சில முக்கிய மற்றும் பலம்வாய்ந்த நபர்கள் குறித்தும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுரேஷ் சாலேயின் அதிரடி கைது - அரசின் மீது பாயும் கடும் விமர்சனங்கள்

சுரேஷ் சாலேயின் அதிரடி கைது - அரசின் மீது பாயும் கடும் விமர்சனங்கள்

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை தடுக்க முயற்சிக்க வேண்டாம்! வெளியான அறிவிப்பு

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை தடுக்க முயற்சிக்க வேண்டாம்! வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... 


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026