மகிந்தவின் செயலாளரிடம் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ள சிஐடி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) செயலாளராகப் பணியாற்றிய லலித் வீரதுங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளது.
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் விளையாட்டுத்துறை அமைச்சுக்காக வரி இல்லாத அடிப்படையில் இறக்குமதி செய்யப்பட்ட பேருந்தொன்று, கார்ல்டன் பாலர் பாடசாலைக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணை
இதன்படி குறித்த குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணைகளைக் குற்றப்புலனாய்வு திணைக்களம் தற்போது ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அக்காலத்தில் ஜனாதிபதி செயலாளர் திணைக்களத்தில் பணியாற்றிய மேலதிக செயலாளரும் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளார்.
நாட்டு அரசியலில் பாரிய சுழல்காற்று
விரைவில் நாட்டு அரசியலில் பாரிய சுழல்காற்று வீசக்கூடும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமது உரிமைகளை பெற்றுக் கொள்ள ஜனநாயக ரீதியில் செயல்படுமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த இளைஞர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
