ஜனாதிபதி தேர்தல் : அரச நிறுவனங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
ஜனாதிபதித் தேர்தலின் போது அரச நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது உள்ளிட்ட சுற்றறிக்கை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தேர்தலின் போது அனைத்து அரச நிறுவனங்களும் உரிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்படவுள்ள கட்சிகள்
ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய வெளிக் கட்சிகளை அடுத்த மாதம் முதல் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அது ஜனாதிபதி தேர்தலில் அவர்களின் பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.
தபால் திணைக்களத்தின் அறிவிப்பு
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான தேர்தல் ஆவணங்கள் அடங்கிய பத்திரங்களை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவுறுத்தல்கள் மாகாண பிரதி தபால் மா அதிபர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க (Rajitha Ranasinghe)குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |