பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் திகதி குறித்து வெளியான அறிவிப்பு
புதிய இணைப்பு
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, மேல், வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய, மற்றும் தென் மாகாணங்களில் உள்ள பாடசாலைகளை எதிர்வரும் 16 ஆம் திகதி மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் உள்ள 10,076 அதற்கமைய, 9929 பாடசாலைகள் எதிர்வரும் 16 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஊவா மாகாணத்தில் 26 பாடசாலைகளும், வடமேல் மாகாணத்தில் 06 பாடசாலைகளும், மத்திய மாகாணத்தில் 115 பாடசாலைகளும் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான நடைமுறைகள் குறித்த சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சுற்றறிக்கை இன்று (09.12.2025) வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மாகாண மட்டத்தில் பாடசாலைகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ (Nalaka Kaluwewa) தெரிவித்துள்ளார்.
பாடசாலைகள் மீண்டும் திறப்பது
தற்போதைய சூழ்நிலை காரணமாக, மூடப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறப்பது இந்த மாதம் 16ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள அனைத்து பாடங்களும் ஜனவரி மாதத்தில் முடிந்தவரை நடத்தப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே (Indika Liyanage) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 7 மணி நேரம் முன்