பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவல்! சிக்கிய சிவில் பாதுகாப்பு படை வீரர் - நீதிமன்றம் கொடுத்த உத்தரவு
திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரையில் கஞ்சா போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த சிவில் பாதுகாப்பு படை வீரரை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் பயாஸ் றஸ்ஸாக் முன்னிலையில் குறித்த சந்தேக நபரை நேற்று ஆஜர்படுத்தியபோது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை - மிகிந்தபுர பகுதியைச் சேர்ந்த ஏட்டிரியல் ரொஷான் சுமதிபால (வயது- 38) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
திருகோணமலையை கடற்கரை பகுதியில் இரகசியமான முறையில் கஞ்சா போதைப் பொருள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக துறைமுக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலை அடுத்து குறித்த சந்தேக நபரை சோதனையிட்ட போது 400 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே அவரை விளக்கமறிலில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 3 Evening