சிவில் சமூக அமைப்புக்களை நசுக்க முனைவது வேதனைக்குரிய விடயம் - சிவகரன் ஆதங்கம்

government mannar cid sivakaran civil society organization
By Vanan Dec 07, 2021 03:01 PM GMT
Report

இலங்கை அரசு சிவில் சமூக அமைப்புக்களை தொடர்ந்து நசுக்க முனைவது வேதனைக்குரிய விடயம் என்கிறார் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் (V.S.Sivakaran).

கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, வவுனியா பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் சிவகரனிடம் மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து இன்று செவ்வாய்க்கிழமை (7) விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த கால சிவில் சமூக செயற்பாடுகள் , நடாத்தப்பட்ட நிகழ்வுகள் தொடர்பாகவும் - குறிப்பாக மாவீரர் தின நிகழ்வுகள் சம்பந்தமாகவும் பல்வேறு கோணத்தில் கேள்விகள் தொடுத்து சுமார் இரண்டரை மணி நேரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,

குறித்த விசாரணைகள் ஊடாக எம்மை சிவில் சமூக செயற்பாடுகளில் இருந்து விலக, எமது ஜனநாயக குரல்வளையை நசுக்கும் விதமாகவே அவர்களின் கேள்விகள் காணப்பட்டன.

சிவில் அமைப்புக்களை வலுப்படுத்த வேண்டும் என்று சர்வதேச அரங்கில் ஜனாதிபதி கூறுகிறார். ஆனால் மறுபுறத்தில் சிவில் அமைப்புக்களை நசுக்க முனைகிறது அரசின் புலனாய்வு அமைப்புகள்.

ஆகவே அரசின் இவ்வாறான நெருக்கடிகளைக் கண்டு நாம் அச்சப்பட போவதில்லை. இவ்விதமான விசாரணைகள் எமக்கு புதியவையும் அல்ல.

எனவே எமது சமூக பணி தொடர்ந்தும் தொடரும் என்பதுடன் சிவில் சமூக அமைப்புக்களை இலங்கை அரசு தொடர்ந்து நசுக்க முனைவது வேதனைக்குரிய விடயம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026