சூடானில் தீவிரமடையும் உள்நாட்டு போர் : இராணுவ தாக்குதலில் 127 பேர் உயிரிழப்பு!
சூடானில் (Sudan) உள்நாட்டு கலவரம் நீடித்து வரும் நிலையில் துணை இராணுவப்படை வீரர்களின் முகாம்கள் மீது குண்டு வீசப்பட்டது. இந்தக் குண்டு வீச்சில் 127 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆபிரிக்க நாடான சூடானில் கடந்த 2021 ஆம் ஆண்டு இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் அங்கு ஆட்சியை நடத்தி வருகிறார்.
துணை இராணுவ படைப்பிரிவுகளில் ஒன்றான அதிவிரைவு ஆதரவு படையினரை இராணுவத்துடன் இணைக்க இராணுவ தளபதி ஜெனரல் படக் அல்- பர்ஹன் முயற்சி மேற்கொண்டார்.
துணை இராணுவ படை
இதற்கு துணை இராணுவ படையின் அதிவிரைவு ஆதரவுபடையினர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இராணுவத்திற்கும் துணை இராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
2022 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு போராக மாறி கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது. சுமார் 2 ஆண்டுகளாக நீடித்துவரும் இந்த போரில் பல்லாயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
அங்குள்ள கிராமங்களை துணை இராணுவ படை வீரர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இராணுவ ஆட்சியினைக் கவிழ்க்க சதிசெய்து வருகின்றனர்.
பொதுமக்கள்
இந்த நிலையில் துணை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள கிராமங்களை குறிவைத்து இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் பொதுமக்கள் உட்பட 127 பேர் உயிரிழந்தனர். இதற்கு துணை இராணுவம் பதிலடி கொடுக்கும் என்பதால் உள்நாட்டு போர் தீவிரம் அடையும் என தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |