காசாவில் அத்தியாவசிய உதவி தட்டுப்பாடு : 65,000 பேர் தவிப்பு

Israel Israel-Hamas War Gaza
By Raghav Dec 12, 2024 11:41 AM GMT
Report

காசாவின் (Gaza) வடக்கு பகுதியினுள் வெளியிலிருந்து வரும் மனிதாபிமான உதவிகள் அனைத்தும் இஸ்ரேல் (Israel) இராணுவத்தினால் தடுக்கப்பட்டிருப்பதால் ஆயிரக்கணக்கான காசா மக்கள் அத்தியாவசிய உதவிகளின்றி தவிப்பதாக ஐக்கிய நாடுகளின் சபை தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் 6 முதல் இஸ்ரேல் இராணுவம் வடக்கு காஸாவில் தரைவழித் தாக்குதல் நடத்தி அப்பகுதிகளைக் கைப்பற்றிவருகிறது.

இதனால் அப்பகுதிகளுக்குள் செல்லும் மனிதாபிமான உதவிகள் அனைத்தும் இஸ்ரேல் இராணுவத்தால் தடுக்கப்பட்டுள்ளன.

சிரியாவில் அசத்தின் வீழ்ச்சி - இஸ்ரேலின் தாக்குதல் : மத்திய கிழக்கின் நிலைப்பாடு

சிரியாவில் அசத்தின் வீழ்ச்சி - இஸ்ரேலின் தாக்குதல் : மத்திய கிழக்கின் நிலைப்பாடு

அடிப்படை உதவி

இந்நிலையில், கடந்த 66 நாட்களாக இஸ்ரேல் கைபற்றிய காஸாவின் வடக்கு பகுதிகளான பெயிட்லஹியா, பெயிட் ஹனொன் மற்றும் ஜபாலியா ஆகிய இடங்களில் வாழும் 65,000 முதல் 75,000 பலஸ்தீனர்கள் உணவு, நீர், மின்சாரம் மற்றும் மருத்துவம் ஆகிய அடிப்படை உதவிகளின்றி தவித்துவருவதாகவும், 5,500இற்கும் மேற்பட்டோர்பெயிட் லஹியாவிலிருந்து வலுக்கட்டாயமாக இடமாற்றப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவரங்களின் கூட்டமைப்பான ஒசிஎச்ஏ தெரிவித்துள்ளது.

காசாவில் அத்தியாவசிய உதவி தட்டுப்பாடு : 65,000 பேர் தவிப்பு | 2023 Israel Hamas War

மேலும் அங்கு நிலவும் உணவுப் பற்றாக்குறையைப் பற்றி அந்த கூட்டமைப்பு கூறுகையில் மொத்தமாக காசா பகுதியில் ஐநாவைச் சார்ந்த வெறும் நான்கு உணவுக்கிடங்குகள் மட்டுமே தற்போது செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸாவில் பொதுமக்கள் உயிர்வாழும் சுழல் முற்றிலும் அழிவுகரமானதாக உள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. அது நிலைமையை இன்னும் மோசமானதாக ஆக்கியுள்ளது.

பசார் அல் ஆசாத் ஆட்சி கவிழ்ப்பு அமெரிக்க, இஸ்ரேல் கூட்டுச்சதி :ஈரான் உச்ச தலைவர் குற்றச்சாட்டு

பசார் அல் ஆசாத் ஆட்சி கவிழ்ப்பு அமெரிக்க, இஸ்ரேல் கூட்டுச்சதி :ஈரான் உச்ச தலைவர் குற்றச்சாட்டு

இஸ்ரேலின் தாக்குதல்

இதனால், ஐநா உட்பட பல உதவி நிறுவனங்கள் காசா மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்க முடியாத சூழலில் உள்ளதாக, காசா நகரத்துக்கான ஐநாவின் மனிதாபிமான மற்றும் புனரமைப்பு ஒருங்கிணைப்பாளர் சிக்ரிட் காக் செவ்வாய்க்கிழமை (10) பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

காசாவில் அத்தியாவசிய உதவி தட்டுப்பாடு : 65,000 பேர் தவிப்பு | 2023 Israel Hamas War

ஏற்கனவே, இஸ்ரேலின் தாக்குதல்களினால் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் பலஸ்தீனர்களுக்கு, தற்போது உணவு குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான உதவிகளும் தடுக்கப்பட்டிருப்பது, அம்மக்களுக்கு இஸ்ரேலால் ஏற்பட்டுவரும் துயரத்தை இன்னமும் அதிகரித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பில் அமைச்சர் பலி

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பில் அமைச்சர் பலி

அமெரிக்கா குடியுரிமை சட்டத்தில் மாற்றம்...! புலம்பெயர் மக்களுக்கு அதிர்ச்சி தகவல்

அமெரிக்கா குடியுரிமை சட்டத்தில் மாற்றம்...! புலம்பெயர் மக்களுக்கு அதிர்ச்சி தகவல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     



ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி