இஸ்ரேல் தேர்தலில் அவசர நிலை: வலதுசாரிகளை வீட்டை விட்டு வெளியேறச் சொன்ன நெதன்யாகு
இது ஒரு அவசர நிலை, வலதுசாரி ஆதரவாளர்கள் உடனடியாக வாக்களிக்கத் திரள வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேலிய நாடாளுமன்றத் தேர்தலின் போது இடதுசாரி ஆதரவாளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்குச்சாவடிகளுக்கு வருகை தந்து வாக்களித்து வரும் நிலையில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேற்கு ஜெருசலேமில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தனது வாக்கைப் பதிவு செய்த பின்னர், சமூக வலைத்தள பக்கங்களிலும் செய்தியாளர்கள் மத்தியிலும் அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
வாக்குச்சாவடிகள்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “இடதுசாரி செயற்பாட்டாளர்கள் வாக்குச்சாவடிகளை நோக்கித் திரண்டு புயல் போல் வருகிறார்கள்.

ஆனால் வலதுசாரி ஆதரவாளர்கள் அலட்சியமாக இருக்கிறார்கள்.
இது விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் உடனே வெளியே வந்து மற்றவர்களையும் வாக்களிக்க அழைத்து வாருங்கள், லிகுட் (Likud) கட்சிக்கு வாக்களியுங்கள்” என அழைப்பு விடுத்துள்ளார்.
அரசின் எதிர்காலம்
யூத அரசின் எதிர்காலம் ஆபத்தில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அரபுப் பகுதிகளில் வழக்கத்தை விட அதிகமான வாக்குப்பதிவு இடம்பெற்று வருவதாகவும் வலதுசாரி ஆதரவாளர்கள் வீட்டிலேயே தங்கியிருக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு தேர்தலை முறைகேடு செய்ய சிலர் முயற்சித்து வருவதாகவும் அவர் குற்ற்ம் சாட்டியுள்ளார்.
மேலும் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் நோக்கில் பைகளில் பணத்தைச் சுமந்து சென்ற மூன்று நபர்களைப் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |