கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மோதல்: தப்பியோடிய கைதிகள்
பொலன்னறுவை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
மோதலில் காயமடைந்த கைதிகள் குழு மற்றும் சிப்பாய் ஒருவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சோமாவதி யாத்திரைக்காக வந்த பேருந்தை வழிமறித்து தப்பிச் சென்ற கைதிகள் குழுவொன்று இன்று (04) அதிகாலை, வர்த்தகர்ஒருவரிடமிருந்து ஐம்பதாயிரம் ரூபா மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகளை அபகரித்துச் செல்ல முற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மோதல்கள்
இந்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 34 கைதிகளை வெலிகந்த காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், சந்தேகநபர்கள் நாளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக வெலிகந்த காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இதற்கு முன்னரும் பல தடவைகள் உணவுப் பிரச்சினை மற்றும் பல்வேறு பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு மோதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |