பாதாள உலக கும்பலுக்கு இடையே சிறைச்சாலைக்குள் மோதல்
Galle
Sri Lanka Police Investigation
Prisons in Sri Lanka
By Sumithiran
காலி சிறைச்சாலைக்குள் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்துள்ளதாக காலி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தகராறு கடந்த செவ்வாய்க்கிழமை (27) இரவு ஏற்பட்டுள்ளது.
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலின் தலைவர்களான “கரந்தெனிய சுத்தா” என்பவரின் சகாக்களுக்கும் “அகமிபொடி அஜித்” என்பவரின் சகாக்களுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
தகராறின் போது “கரந்தெனிய சுத்தா” என்பவரின் சகா ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்தவர் சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை… 7 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி