ஆப்கானில் தலிபான் தலைவர்களுக்கிடையே வெடித்தது மோதல்
attack
afghanistan
taliban
By Jaso
ஆப்கானிஸ்தானில் தலிபான் தலைவர்களுக்கு இடையே மோதல் வெடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மோதலால் ஜனாதிபதி மாளிகையில் குழப்பம் நீடிக்கிறது. புதிய அரசு தொடர்பாக தலிபானுக்கும் ஹக்கானி குழுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியது. இரு தரப்புக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டதில் முல்லா அப்துல் கனி பரதர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
அப்துல் கனி பரதர் கடந்த சில நாள்களாக பொதுவெளிக்கு வராத நிலையில், தலிபான் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.