நிலவும் சீரற்ற வானிலையால் 5 ஆயிரத்து 958 பேர் பாதிப்பு
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஆயிரத்து 637 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 958 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய 193 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
கொழும்பு மாவட்டம்
தரவுகளுக்கு அமைய மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் ஆயிரத்து 209 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 337 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் சுட்டிக்காட்டுன்றன.
அத்துடன், மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என தேசிய வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.