வறட்சியான காலநிலையால் 3 இலட்சத்துக்கு அதிகமானோர் பாதிப்பு - அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்
Sri Lanka
Climate Change
By Beulah
நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலையால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
அவ்வகையில், வறட்சியான காலநிலையினால் 89 ஆயிரத்து 85 குடும்பங்களைச் சேர்ந்த மூன்று லட்சத்து 6 ஆயிரத்து 934 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிப்பிற்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை

அத்துடன், வடக்கு மாகாணத்தில் 75 ஆயிரத்து 607 பேரும், கிழக்கு மாகாணத்தில் 63 265 பேரும், சப்ரகமுவ மாகாணத்தில் 55 ஆயிரத்து 91 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கண்காணிப்பு முறையின் கீழ் 8 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் நீர் வழங்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அனோஜா களுஆராச்சி குறிப்பிட்டுள்ளார்.
YOU MAY LIKE THIS