தமிழர் பிரதேசத்தை வாட்டும் வறட்சி -இலட்சக்கணக்கானோர் பாதிப்பு
தற்போதைய வறட்சியான காலநிலையினால் வடக்கு மாகாணமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இதன்படி வடக்கில் 23,688 குடும்பங்களைச் சேர்ந்த 75,607 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு, கிழக்கில்

கிழக்கு மாகாணத்தில் 18,981 குடும்பங்களைச் சேர்ந்த 63,265 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சப்ரகமுவ மாகாணத்தில் 13,705 குடும்பங்களைச் சேர்ந்த 55,096 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் வடமேல் மாகாணத்தில் 7,143 குடும்பங்களைச் சேர்ந்த 23,534 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் அதிகரிப்பு

இதேவேளை வறட்சியான காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாகவும்
84,664 குடும்பங்களைச் சேர்ந்த 291,720 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.