அணுசக்தி விவகாரத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா: ஈரான்! தொடங்கும் பேச்சுவார்த்தை
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளின் தொழில்நுட்பக் குழுக்கள் மற்றும் கீழ்மட்ட இராஜதந்திரிகள் வரும் ஜூன் 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் சுவிட்சர்லாந்தில் மீண்டும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த வரவிருக்கும் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தையானது பிரதானமாக ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் தொடர்பான கேள்விகளுக்குத் தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டு அமையவுள்ளது.
அணு ஆயுதம்
ஈரான் எந்தவொரு சூழ்நிலையிலும் அணு ஆயுதத்தை உருவாக்குவதை அமெரிக்கா விரும்பவில்லை.
இருப்பினும், தற்போதைய இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளில் அணு ஆயுதங்களை இலக்கு நோக்கிச் செலுத்தும் ஏவுகணை விநியோகக் கட்டமைப்பு அல்லது பாலிஸ்டிக் ஏவுகணைகள் குறித்தோ விவாதிக்கப்படவில்லை.

ஏனெனில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் ஈரானின் ஏவுகணைத் திறனைப் போதுமான அளவு வீழ்த்திப் பலவீனப்படுத்தியுள்ளதாக அமெரிக்கா நம்புகிறது.
எனவே தற்போதைய சூழலில் அணுசக்தி விவகாரத்தை மட்டுமே அமெரிக்கா கையில் எடுத்துள்ளதுடன் அமெரிக்காவின் பார்வையில் இதுவே தற்போது தீர்க்கப்பட வேண்டிய மிக முக்கியமான மற்றும் அவசரமான விவகாரமாகவும் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 18 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்