அலுவலக கூரை மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்!
By pavan
அம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கீர்த்தி ரணசிங்க, கூரை மீது ஏறி போராட்டம் ஒன்றில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுரங்க மற்றும் புவிசரிதவியல் பணியகத்தின், அம்பாறை அலுவலக கூரையில் ஏறியே இப்போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது.
குறித்த அலுவலகத்தின் தற்போதைய பிரதானியை நீக்குமாறு கோரியே அவர் இந்த போராட்டத்தை நேற்றைய தினம் (10.05.2023) முன்னெடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மணல் உரிமதாரர்கள் ஆதரவு
மேலும், மணல் அகழ்வு உரிமம் உரிய காலத்தில் வழங்கப்பட வேண்டும் எனவும் அனைத்து இன மக்களுக்கும் சமமாக உரிமம் வழங்கப்பட வேண்டும் என்றும்“ கோரிக்கை முன்வைத்துள்ளார்.
அவரது ஆதரவுடன் சுமார் 50 மணல் உரிமதாரர்கள் அடங்கிய குழுவும் இந்த அலுவலகத்தின் முன் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி