புது டெல்லியில் பதற்றம்! மோடி அரசாங்கத்தை எதிர்க்கும் கரப்பான் பூச்சி ஆர்பாட்டத்தில் தடியடி தாக்குதல்

Narendra Modi India Cockroach Janta Party (CJP)
By Dharu Jul 20, 2026 07:23 AM GMT
Report

சர்வதேச அளவில் கவனத்தை பெற்றுள்ள இந்தியாவின் "கொக்ரோச்" (Cockroach) அமைப்பின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகக் கோரி அந்நாட்டின் தலைநகர் புதுடெல்லியில் பாரிய போராட்டம் ஒன்றை தொடர்ந்துள்ளனர்.

இதன்படி ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்று(20.07.2026) அந்நாட்டு நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக திரண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு தரப்பினரால் தாக்குதல் மேற்கொள்ளும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

ஒரு வருடத்திற்கு தங்கம் வாங்க வேண்டாம் - மோடியின் விசித்திர வேண்டுகோள்

ஒரு வருடத்திற்கு தங்கம் வாங்க வேண்டாம் - மோடியின் விசித்திர வேண்டுகோள்

அனுமதி மறுத்த காவல்துறை

போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்த போதிலும், திட்டமிட்டபடி பேரணியை கொக்ரோச் அமைப்பின் குழுவினர் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

புது டெல்லியில் பதற்றம்! மோடி அரசாங்கத்தை எதிர்க்கும் கரப்பான் பூச்சி ஆர்பாட்டத்தில் தடியடி தாக்குதல் | Cockroach Janata Org That Laid Siege To Delhi

பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது ஆட்சிக் காலத்தில் அவருக்கு எதிராக எழுந்துள்ள மிகப் பெரிய மக்கள் சவாலாக இந்த போராட்டம் கருதப்படுகிறது.

சமூக ஊடகங்களில் மில்லியன் கணக்கான ஆதரவாளர்களைப் பெற்றுள்ள இந்த அமைப்பு , இந்திய மக்களிடத்திலும் குறிப்பிடத்தக்க ஆதரவைப் பெற்று வருகிறது.

கடந்த சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக்கை காவல்துறை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதைத் தொடர்ந்து, இந்தப் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.

நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் இரவு முழுவதும் ஜந்தர் மந்தர் பகுதியில் திரண்டுள்ளதாக கூறப்படுகிறது.

வெற்றிகரமாக ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்

வெற்றிகரமாக ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்

கசிந்த வினாத்தாள்கள்

அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததுடன், ஏராளமான காவல்துறையினரும் துணை இராணுவப் படையினரும் குவிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

புது டெல்லியில் பதற்றம்! மோடி அரசாங்கத்தை எதிர்க்கும் கரப்பான் பூச்சி ஆர்பாட்டத்தில் தடியடி தாக்குதல் | Cockroach Janata Org That Laid Siege To Delhi

போராட்டக்காரர்கள் "தர்மேந்திர பிரதான் பதவி விலகு", "நரேந்திர மோடி பதவி விலகு" எனக் கோஷமிட்டடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேசிய வைத்தியத்துறை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு வினாத்தாள்கள் கடந்த மே மாதம் கசிந்ததைத் தொடர்ந்து, 20 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து "Cockroach Janta Party (CJP)" என்ற இயக்கம் உருவானதாக தெரிவிக்கப்படுகிறது. போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள், போட்டித் தேர்வுகளில் நடைபெறும் வினாத்தாள் கசிவுகள் மற்றும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதற்கிடையில், மருத்துவமனையில் இருந்து வெளியிட்ட அறிக்கையில், கல்வி அமைப்பில் ஏற்பட்டுள்ள தோல்விகளுக்கும் வினாத்தாள் கசிவுகளுக்கும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் அல்லது போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்ற உறுதியை அரசாங்கம் வழங்கினால் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வதாக சோனம் வாங்சுக் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மோடி பிரதமராக பதவியேற்கும் திகதி மாற்றம்: வெளியான உத்தியோகபூர்வ அறிவிப்பு

மோடி பிரதமராக பதவியேற்கும் திகதி மாற்றம்: வெளியான உத்தியோகபூர்வ அறிவிப்பு

ஈரானில் அடுத்தடுத்து பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்!

ஈரானில் அடுத்தடுத்து பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016