தமிழர்களுக்கு சமஷ்டி ஒருபோதும் கிட்டாது - தமிழ்க்கட்சிகளின் நடத்தைக்கு அரசாங்கம் எதிர்வினை

Ranil Wickremesinghe Government Of Sri Lanka Prasanna Ranatunga India
By Vanan Jul 13, 2023 02:55 PM GMT
Report

தமிழ்த் தேசியக் கட்சிகள் கோரும் சமஷ்டி தீர்வு ஒருபோதும் சாத்தியமாகாது என்றும் அவ்வாறான ஒரு தீர்வை சிறிலங்கா அரசு அனுமதிக்காது எனவும் ஆளும் தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அதிபல் ரணில் விக்ரமசிங்கவின் இந்தியாவிற்கான விஜயத்திற்கு முன்னதாக தமிழ் கட்சிகள் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியமை தொடர்பாக ஊடமொன்று எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ரணிலின் இந்தியப் பயணம்

தமிழர்களுக்கு சமஷ்டி ஒருபோதும் கிட்டாது - தமிழ்க்கட்சிகளின் நடத்தைக்கு அரசாங்கம் எதிர்வினை | Collective Solution For Tamils Government Reaction

இதன் போது மேலும் பதில் வழங்கிய அவர், “ரணில் விக்ரமசிங்கவின் இந்தியப் பயணம் திட்டமிட்டவாறு இந்த மாத இறுதியில் முன்னெடுக்கப்படும்.

இலங்கை தொடர்பாக இந்தியத் தரப்புக்குப் பல விடயங்கள் தெரிவிக்கப்படும் எனவும் குறிப்பாக இந்தியா தமிழ் மக்களின் விடயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்துகின்றது.

இதனால், தமிழர் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள், அதிகாரப் பகிர்வு தொடர்பான விடயங்களுக்கு அதிபர் அதிகம் முக்கியத்துவம் கொடுத்து அவற்றை இந்தியத் தரப்புக்குத் தெளிவுபடுத்துவார்.

தமிழ்த் தேசியக் கட்சிகள் இந்தியப் பிரதமருக்கு முட்டிமோதிக் கொண்டு கடிதம் அனுப்புவது பயனற்றது. அரசியல் இலாபம் கருதியே தமிழ்க் கட்சிகள் இவ்வாறு நடந்துகொள்கின்றன.

சமஷ்டி தீர்வு

தமிழர்களுக்கு சமஷ்டி ஒருபோதும் கிட்டாது - தமிழ்க்கட்சிகளின் நடத்தைக்கு அரசாங்கம் எதிர்வினை | Collective Solution For Tamils Government Reaction

13 ஆவது திருத்தச் சட்ட நடைமுறை உடனடி சாத்தியமற்றது. நாடாளுமன்றத்தின் மூலமே அது அனுமதிக்கப்பட வேண்டும்.

தமிழ்த் தேசியக் கட்சிகள் கோரும் சமஷ்டி தீர்வு இது ஒருபோதும் சாத்தியமற்றது. அரசு அதற்கு அனுமதி வழங்காது. கூட்டாட்சி எனப்படும் சமஷ்டி என்பது நாட்டைத் துண்டாடும் என்பது அனைவருக்கும் தெரியும்.

இலங்கையில் தற்போதுள்ள அரசமைப்பை மறுசீரமைத்து அல்லது புதிய அரசமைப்பு மூலம் நாட்டு மக்கள் விரும்பும் தீர்வை அதிபர் ரணில் விக்ரமசிங்க தனது பதவிக் காலத்துக்குள் வழங்குவார்" என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Neuenrade, Germany, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025