காவல்துறையினரின் கோரிக்கையை நிராகரித்தது கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம்!
அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் நாளையதினம் கொழும்பில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தினை தடுத்து நிறுத்துமாறு காவல்துறையினர் முன்வைத்த கோரிக்கையை கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
குறித்த கோரிக்கையை கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் இன்றறைய தினம் நிராகரித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களுக்கமைய, குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்குமாறு உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு வாழைத்தோட்டம் காவல்துறையினர் நீதிமன்றிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தனர்.
இந்நிலையில் கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் அந்த கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும் எதிக்கட்சியினரின் ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிக்குமாறு காவல்துறையினர் முன்வைத்த விண்ணப்பங்களை சில நீதிமன்றங்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாகக் காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ (Nihal Taltuwa) தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், 5 ஆம் இலக்க புதுக்கடை நீதிவான் நீதிமன்றம், 1 ஆம், 2 ஆம் இலக்க மஹர நீதிவான் நீதிமன்றம், கடுவலை மற்றும் ஹோமாகம போன்ற 5 நீதிவான் நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.