யாழிலிருந்து காலிமுகத்திடலுக்கு விரையவுள்ள மக்கள்! கொழும்பில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாகைகள்
Galle Face Protest
Jaffna
Galle Face Riots
By S P Thas
யாழ்ப்பாணத்தில் இருந்து பலர் காலிமுகத்திடல் போராட்டத்தில் பங்கேற்பதற்காக எதிர்வரும் சனிக்கிழமையன்று கொழும்பு வரவுள்ளனர் என்று போராட்டக்களத்தில் உள்ளவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில், காலிமுகத்திடலில் கடந்த மே 9ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் என்று கூறி சுமார் 50 பேரின் புகைப்படங்கள் காலிமுகத்திடலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அமைதிப் போராட்டத்தை தாக்கி நாட்டை எரித்தவர்கள் என்ற தலைப்பில் இந்த புகைப்படங்களில் பதாகை தொங்க விடப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டில் ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை கோரிய பதாகைகளும் காலிமுகத்திடலில் தொங்கவிடப்பட்டுள்ளன.
இன்று காலிமுகத்திடல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 47 நாட்கள் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி