கொழும்பு தேசிய மருத்துவமனை விடுத்துள்ள அறிவித்தல்
covid
colombo
surgery
cancel
By Sumithiran
கொழும்பு தேசிய மருத்துவமனையில் மேற்கொள்ளப்படவிருந்த அனைத்து அறுவை சிகிச்சைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் பணிப்பாளர் குமார விக்ரமசிங்க தெரிவித்தார்.
எனினும், அவசர அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்..
மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவு, இருதயவியல் சிகிச்சைப்பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவு என்பன வழமை போன்று செயற்பட்டு வருவதாகவும், கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக இரண்டு தனி விடுதிகளில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்