கொழும்பில் இடியுடன் கூடிய கன மழை: வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள்( படங்கள்)
Colombo
Kandy
Floods In Sri Lanka
By Dilakshan
கொழும்பில் திடீரென பெய்த இடியுடன் கூடிய கன மழையினால் கொழும்பின் பிரதான வீதிகள் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
அத்தோடு, கொழும்பு - பதுளை பிரதான வீதி மண்சரிவினால் முற்றாக தடைப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், கொழும்பு - கண்டிபிரதான வீதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தமையினால் அவ் வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
முன்னெச்செரிக்கை
குறித்த மரம் நெலும்தெனிய உடுகும்புர பிரதேசத்தில் கண்டி - கொழும்கு பிரதான வீதியில் வீழ்ந்துள்ளது.

இந்நிலையில், இடியுடன் கூடிய கன மழையினால் ஏற்படக் கூடிய ஆபத்துக்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 5 மணி நேரம் முன்
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி