புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பப்பட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலை ஊழியர்கள்
ஹெரோயின், ஐஸ் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான கொழும்பு தேசிய வைத்தியசாலை ஊழியர்கள் இருவர் உட்பட நால்வரை 6 மாத புனர்வாழ்விற்காக கந்தகாடு தடுப்பு முகாமுக்கு அனுப்புமாறு மாளிகாகந்த மேலதிக நீதவான் தம்மிக்க ஹேமபால உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு புனர்வாழ்விற்கு குறிப்பிடப்பட்டவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பராமரிப்புப் பிரிவைச் சேர்ந்த பராமரிப்புப் பணியாளர் அவர்களுடன் இணைந்து போதைப்பொருள் உட்கொள்வதில் ஈடுபட்டிருந்த இரண்டு நண்பர்களும் ஆவர்.
போதைப்பொருள் குடிக்கும் கும்பல்

பொரளை காவல் நிலைய பிரதான காவல்துறை பரிசோதகர் ஜனக பிரியதர்ஷன விதானகே நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான், சந்தேக நபர்களை புனர்வாழ்விற்காக அனுப்புமாறு உத்தரவிட்டார்.
சந்தேகநபர்கள் அனைவரும் வனத்தமுல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், இவர்கள் போதைப்பொருள் குடிக்கும் கும்பலை சேர்ந்தவர்கள் எனவும் காவல்துறையினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
நீதிமன்றின் உத்தரவு

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான இவர்கள் சமூகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக காவல்துறையினர் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கையை கருத்திற்கொண்ட நீதவான், சந்தேக நபர்களை 6 மாதங்களுக்கு புனர்வாழ்வுக்கு அனுப்புமாறு உத்தரவிட்டார்.
பொரளை காவல் நிலைய பிரதான பரிசோதகர் ஜனக விதானகே தலைமையில் விசாரணைகள் இடம்பெற்றன.