வெளிநாடுகளிடம் பிச்சையெடுக்கும் நிலையில் ராஜபக்ஷக்கள்!
பணத்திற்காக வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்கும் நிலைக்கு ராஜபக்ஷக்கள் சென்றுள்ளதாக எதிர்க்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொருளியல் நிபுணர் ஏரான் விக்ரமரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பொருட்களின் விலைகளில் பாரிய அதிகரிப்பு நிலவுகின்றது. அரசாங்கத்திடம் இதற்கு தீர்வு இல்லை என்றே எனக்கு தெரிகின்றது. எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு நாட்டு மக்களுக்கு மிகவும் கஸ்டமாக அமையப் போகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார அனர்த்தத்திற்கு நல்லாட்சியில் பெற்றுக் கொண்ட கடன் தான் காரணம் என ராஜபக்ஷக்கள் தெரிவித்து வருகின்றமை முற்றிலும் பொய்யானது.
2019 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இவர்கள் பாரிய தொகையினை கடனாக பெற்றுக்கொண்டுள்ளார்கள். அதற்கான வட்டியும் அதிகமானது. தற்போது உணவு மற்றும் மருந்து வழங்கலில் பாரிய பிரச்சனை இலங்கையில் நிலவிவருகின்றது.
இன்று நாட்டில் நோயாளிக்களுக்கு வழங்குவதற்கு மருந்தகங்களில் மருந்து இல்லை. மக்கள் இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் ஆட்சியாளர்கள் விடுமுறை காலத்தில் வெளிநாடுகளுக்கு உல்லாச பிரயாணங்களை மேற்கொண்டுள்ளனர்.
பொருளாதாரம் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் வங்கிகள் இன்று முடங்கியுள்ளன. மக்களினால் வங்கிகளில் கடன் பெற முடியாத நிலை காணப்படுகின்றது.
பணத்தினை உழைக்கும் வழிமுறைகள் இந்த அரசாங்கத்திடம் இல்லை. பணத்திற்காக நாடுகளிடம் பிச்சை எடுககும் நிலைக்கு ராஜபக்ஷக்கள் சென்றுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.