காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட போராட்டக்காரர்கள்- பதற்றமான நிலையில் தென்னிலங்கை!
எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு ஹைட்பார் மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதுடன் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.
நாட்டின் பல இடங்களில் இருந்தும் கொழும்பு நோக்கி புறப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டகாரங்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளதால், பல பகுதிகளில் இன்று பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வழியாக கொழும்பு நோக்கி சென்ற ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்து நிறுத்தியதால், காவல்துறைக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகமை தொகுதி அமைப்பாளர் ரெஹான் ஜயவிக்ரமவுக்கும் (Rehan Jayawickrama )இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதேவேளை, கொழும்பு நோக்கி புறப்பட்டு சென்ற தம்மை தடுத்து நிறுத்திய காவல்துறையினருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் கட்டாயம் வழக்கு தொடரப் போவதாக ஜயவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மிக மோசமான தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட வேண்டாம் எனவும் அவர் காவல்துறையினருக்கு பதிலளித்துள்ளார்.
