மறு பரிசீலனை செய்யப்படும்! அமைச்சர் உறுதி
srilanka
colombo
abeygunawardana
By Vasanth
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் குறித்து துறைமுக தொழிற்சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படும் என்று துறைமுக மற்றும் கப்பற்துறை அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
துறைமுக ஊழியர் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்த போராட்டம் தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது பேசிய அவர், அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிராக முன்னெடுக்கும் போராட்டங்களின் பின்னணியில் அரசியல் நோக்கங்கள் மறைந்துள்ளன.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு வழங்கும் போது துறைமுக ஊழியர் சங்கத்தினர் எதிர்க்கவில்லை.
எனவே கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் குறித்து துறைமுக தொழிற்சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படும் என்றார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி