கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த விசேட தொடருந்து (படங்கள்)
Railways
By pavan
கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி விசேட தொடருந்து இன்று வியாழக்கிழமை(13) பயணித்தது.
இந்த விசேட தொடருந்து ல் போக்குவரத்து, பெருந் தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன உட்பட்ட ரயில்வே திணைக்கள அதிகாரிகள் அனுராதபுரம்- வவுனியா வரையில் அமைக்கப்பட்ட புதிய தொடருந்து பாதை அமைப்பின் கண்காணிப்பு நடவடிக்கையாக யாழ்ப்பாணம் வருகை தந்தனர்.
வரவேற்ற டக்ளஸ்

இந்த விசேட தொடருந்தினது அதிகாலை 5.45 மணிக்கு புறப்பட்டதுடன் யாழ்ப்பாணம் பிரதான தொடருந்து நிலையத்தை மாலை 3 மணியளவில் வந்தடைந்தது.
போக்குவரத்து, பெருந் தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணம் தொடருந்து நிலையத்தில் வரவேற்றார்.



6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி