கொழும்பு - தலைமன்னார் தொடருந்து சேவை குறித்து வெளியான அறிவிப்பு
கொழும்பு (Colombo) கோட்டையிலிருந்து தலைமன்னார் (Talaimannar) வரையிலான தொடருந்து சேவையை மீள ஆரம்பிப்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி 11 மாதங்களின் பின்னர் நாளை மறுதினம் (12) முதல் குறித்த தொடருந்து சேவை மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் (Sri Lankan Railway Department) தெரிவித்துள்ளது.
கொழும்பிலிருந்து தலைமன்னாருக்கான முதலாவது தொடருந்து, செவ்வாய்க்கிழமை மாலை 4:15 இற்கு புறப்படும் எனத் தொடருந்து திணைக்களத்தின் பிரதிப்பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே (N.J. Indipolage) தெரிவித்துள்ளார்.
தலைமன்னாரை சென்றடையும்
அத்துடன் நேர அட்டவணையின்படி, குறித்த தொடருந்து இரவு 9.50 அளவில் தலைமன்னாரை சென்றடையும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கொழும்பு - யாழ்ப்பாணம் (Jaffna) இடையிலான தொடருந்து சேவை கடந்த 28ம் திகதி மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
அத்துடன் யாழ். காங்கேசன்துறைக்கும் கொழும்பு கோட்டைக்கும் இடையிலான குளிரூட்டப்பட்ட தொடருந்து சேவையை கடந்த 2ம் திகதி முதல் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மஹவ மற்றும் அநுராதபுரம் இடையிலான தொடருந்து மார்க்கத்தின் நவீனமயமாக்கல் பணிகள் நிறைவடைந்த நிலையில், வடக்கு தொடருந்து சேவை மீண்டும் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |