முருத்தெட்டுவ தேரரின் நியமனம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
கோட்டாபயவின் நியமனத்திற்கு எதிராக கொழும்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் மாணவர் சமூகமும் ஏகமனதான அதிருப்தியை வெளியிட்டுள்ளன.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் நியமிக்கப்பட்டுள்ளமைக்கு, எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த அதிருப்தி வெளியாகியுள்ளது.
இந்த நியமனம் தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் மாணவர் சமூகமும் தெரிவித்திருப்பதாவது,
ஒரு பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவி என்பது ஒருபோதும் அரசியல் நியமனமாகவோ அல்லது அரசியல் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றும் வகையிலோ அமையக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை வேந்தருக்கு சட்டப்பூர்வ நிர்வாக அதிகாரங்கள் இல்லை என்றாலும், அவர் பல்கலைக்கழகத்தின் கௌரவத்தின் சின்னமாக, பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறாா்.
இந்நிலையில் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவிக்கான அரசியல் நியமனம் பல்கலைக்கழக நிர்வாகத்தின் சுதந்திரத்தையும் பல்கலைக்கழகத்தின் ஒட்டுமொத்த கண்ணியத்தையும் அழிக்கக்கூடும் என்று மாணவர் ஒன்றியமும், மாணவா் சங்கமும் எச்சரிக்கை விடுத்துள்ளன.