கொழும்பில் பிரதான பகுதிகளுக்கு நீர்வெட்டு..!
Colombo
Sri Lanka
Sri Lankan Peoples
Water Board
By Dhilak
கொழும்பின் சில பகுதிகளில் இன்று(07) மாலை 5 மணி தொடக்கம் நாளை(08) காலை 8 மணி வரை சுமார் 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 11, 12, 13, 14, மற்றும் 15 ஆகிய இடங்களிலேயே பிரதானமாக நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
நீர் விநியோகம் தடை
நீர் விநியோகம் தடைப்பட்டுள்ள காலகட்டத்தில் அந்தப் பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான நீரை சேமித்து வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
